செய்திகள்
தமிழக அரசு

தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்

Published On 2020-05-30 13:15 GMT   |   Update On 2020-05-30 13:15 GMT
தமிழகத்தின் உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வர மூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது பணிக்காலம் இன்று மாலையுடன் முடிகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவு வெளியான பின்னர் மே 23ஆம் தேதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2016ஆம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

தமிழக காவல்துறையில் மிக சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றான உளவுத்துறையின் ஐஜியாக நீண்ட வருடங்கள் பணியில் இருந்த சத்தியமூர்த்தி இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்தநிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வந்த நிலையில், தமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வர மூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News