செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப்பின் மீண்டும் கொரோனா தொற்று

Published On 2020-05-22 20:01 IST   |   Update On 2020-05-25 09:41:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலில் அடியெடுத்து வைத்த மாவட்டம் காஞ்சிபுரம். அதன்பின் ஈரோடு மாவட்டம் சென்னையுடன் போட்டியிட்டது. ஆனால் கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக அமல்படுத்தியதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை 70-க்குள் நிறுத்தியது. இதில் ஒருவர் உயிரிழக்க 69 பேருக்கு சிகிச்சை அளித்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

கடந்த 37 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 71-ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று 786 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News