செய்திகள்
வடமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை செய்த காட்சி.

சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை

Published On 2020-05-14 15:15 GMT   |   Update On 2020-05-14 15:15 GMT
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு வேலை செய்து வந்த பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.

இதையடுத்து சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வைத்திருந்தால் தான் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம், வடகால், பகுதியில் தங்கி உள்ள மேகாலயா மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 32 பேருக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News