செய்திகள்
வைத்திலிங்கம் எம்பி

தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை

Published On 2020-05-13 15:45 IST   |   Update On 2020-05-13 15:45:00 IST
சிறு, குறு, தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோரி வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 2 மாதத்திற்கு மேலாக நடைமுறையில் உள்ளது.

இதனால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் முடங்கியுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பளமின்றி உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் இ.பி.எப். செலுத்தி வந்துள்ளனர். அந்த நிதியிலிருந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News