செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு தொடர்பான பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம்

Published On 2020-05-13 09:05 GMT   |   Update On 2020-05-13 09:05 GMT
புதுவை அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ. கீதாஆனந்தன், தலைமை செயலர் அஸ்வினி குமார், கலெக்டர் அருண், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, அரசு செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனா தொடர்பான புதுவை யூனியன் பிரதேச கட்டுப்பாட்டு திட்ட கையேட்டை வெளியிட்டார்.

Tags:    

Similar News