செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 224 ஆக உயர்வு

Published On 2020-05-10 16:23 IST   |   Update On 2020-05-10 16:23:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த வாரம் முதல் நோயின் தொற்று வேகமாக பரவி வருகிறது.

நேற்று மட்டும் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 பேருக்கு உறுது செய்யப்பட்டது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 3-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் வெறும் 93 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுடன் உள்ள தொடர்பு காரணமாக நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

இதையடுத்து கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களை கணக்கெடுத்து பரிசோதித்து வருகிறார்கள்.

மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி 38 பேருக்கும், 6-ந்தேதி 9 பேருக்கும், 7-ந்தேதி 13 பேருக்கும், 8-ந்தேதி 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News