செய்திகள்
செங்கல் தயாரிப்பு

சூளையில் எரியூட்ட முடியாமல் செங்கல்கள் வீணாகும் அவலம்

Published On 2020-05-07 13:59 IST   |   Update On 2020-05-07 13:59:00 IST
ஊரடங்கு உத்தரவால் சூளையில் எரியூட்ட முடியாமல் ரூ.5 கோடிக்கும் மேலாக பச்சை செங்கல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து நடுத்தர தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் செங்கல் தயாரிப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவால் வம்புப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, நெற்குணம், கலித்திரம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.5 கோடிக்கும் மேலாக பச்சை செங்கல்கள் அறுத்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றை சூளையில் எரியூட்ட மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் பச்சை செங்கல்கள் வீணாகி வருகின்றன.

கோடை மழை பெய்தால் இந்த செங்கல்கள் கரைந்து விடும் என்பதால் செங்கல் தயாரிப்பாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். இவற்றை மூடுவதற்கு தார்பாய் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவற்றின் மதிப்பு சுமார் ரூ.25 கோடியாகும். வேலையின்மை காரணமாக கிராமப்புறத்தில் ஆண்களும், பெண்களும் செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது செங்கலை வேக வைக்க முடியாமல் பணிகள் நின்றுள்ளதால் அவர்களும் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றனர்.

Similar News