செய்திகள்
புதுவையில் காய்கறி விலை உயரும் அபாயம்
சென்னையில் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் புதுவையில் காய்கறி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
சென்னையில் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் இருந்த அதிகம் பேருக்கு கொரோனா பரவியதால் மார்க்கெட்டை மூடி விட்டார்கள்.
இதனால் சென்னையில் காய்கறி விலை உயர தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதே போல் புதுவைக்கும் வருவதுண்டு. சென்னையில் காய்கறி விலை உயர்ந்து இருப்பதால் புதுவையிலும் காய்கறி விலை உயர வாய்ப்பு உள்ளது.