செய்திகள்
மாத்திரைகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்

Published On 2020-04-29 19:06 IST   |   Update On 2020-04-29 19:06:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
காஞ்சீபுரம்:

கொரோனா வைரஸ் பாதிப்பினை கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது, கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இந்த மாத்திரையை தினமும் ஒன்று வீதம் 10 நாட்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News