செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு கவச பொருட்கள் தொகுப்பு வழங்கிய கலெக்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு கவச பொருட்கள் தொகுப்பு- கலெக்டர் வழங்கினார்

Published On 2020-04-29 06:39 GMT   |   Update On 2020-04-29 06:39 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு கவச பொருட்கள் தொகுப்பை கலெக்டர் ஜான் லூயிஸ் வழங்கினார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஊரடங்கு காலத்தில் விடுதிகள், பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தரையில் தவழ்ந்து செல்லும் போது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கையுறைகள், கால்களுக்கு கால் உறைகள், முட்டிப் பட்டைகள், முககவசங்கள், கிருமி நாசினிகள் ஆகிய பாதுகாப்பு கவசங்கள் அடங்கிய தொகுப்பு பைகளை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தில் கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று வழங்கினார்.

மேலும் வீடுகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தொகுப்பினை, நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலமாக வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன் உடனிருந்தார்.
Tags:    

Similar News