செய்திகள்
கொடைக்கானல்

அனுமதி சீட்டு முறைகேடு- கொடைக்கானலுக்கு வந்த‌ 11 பேர் திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்

Published On 2020-04-22 14:38 GMT   |   Update On 2020-04-22 14:38 GMT
அனுமதி சீட்டை முறைகேடாக திருத்தி கொடைக்கானலுக்கு காரில் வந்த‌ 11 பேர் திருப்பி அனுப்ப‌ப்பட்டனர். போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கொடைக்கானல்:

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒரு மாவட்டத்திலிருந்து பிற மாவட்டத்திற்கு செல்ல கலெக்டர் அனுமதி சீட்டு அல்லது ஆன்லைனில் இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பாலமுருகன் என்பவர் மருத்துவ தேவைக்காக கொடைக்கானல் மேல்மலை பகுதியான கிளாவரை கிராமத்திற்கு செல்ல அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி சீட்டு பெற்றுள்ளார்.

இந்த சீட்டை வைத்துக்கொண்டு காரில் ஒரு சிறுமி, 3 பெண்கள் உள்ளிட்டோர் என 11 நபர்கள் வந்த‌னர். கொடைக்கானல் சுங்கச்சாவடி நுழைவாயில் பகுதியில் போலீசார், சுகாதார துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி சீட்டில் ஒருவர் என குறிப்பிட்டதை 7 நபர்கள் என திருத்தம் செய்து 11 நபர்கள் ஏற்றி வந்ததும், அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்ட வாகனத்தின் எண்ணை மாற்றி வேறொரு வாகனத்தில் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் டிரைவ‌ர் விக்னேஸ்வரன், அனுமதி சீட்டு பெற்ற பாலமுருகன் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்பு வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனத்தில் பயணித்த மற்றவர்களை வேறொரு வாகனத்தில் திருப்பூருக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News