செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொண்ட கரைப்புதூர் நடராஜன்

பல்லடத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட எம்.எல்.ஏ.

Published On 2020-04-22 15:08 IST   |   Update On 2020-04-22 15:08:00 IST
பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று கண்டறியும் நவீன கருவி மூலம் அத்தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் பரிசோதனை செய்துகொண்டார்.
பல்லடம்:

பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று கண்டறியும் நவீன கருவி (ரேபிட் கிட்) மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை தொடங்கியது. இதனை பல்லடம் தொகுதி கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் பார்வையிட்டு அவரும் நவீன கருவி மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொண்டார்.

பின்னர் நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்பட சுமார் 200 பேருக்கு நவீன கருவி மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News