செய்திகள்
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் முகக்கவசத்துடன் நிற்பதை படத்தில் காணலாம்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு முகக்கவசம்- ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

Published On 2020-04-10 16:05 GMT   |   Update On 2020-04-10 16:05 GMT
ராஜபாளையம் பகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு முகக்கவசங்களை வழங்கினார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனையின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது  ராஜபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக முகத்தில் அணியும் மாஸ்க் மற்றும் நிதி உதவி வழங்கினார். 

நிகழ்ச்சியில் ராஜபாளையம் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணகுமார், சிவகாசி ஒன்றிய செய லாளர் புதுப்பட்டி கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News