செய்திகள்
பிரதமருக்கு எழுதிய கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன்

உணவுக்கு எண்ணெய் இல்லாத ஏழைகள், எப்படி விளக்கேற்றுவார்கள்?- பிரதமருக்கு கமல்ஹாசன் கடிதம்

Published On 2020-04-06 10:01 GMT   |   Update On 2020-04-06 10:01 GMT
அடுத்த வேளை உணவுக்கு எண்ணெய் இல்லாத ஏழைகள், எப்படி விளக்கேற்றுவார்கள்? என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

'My Open letter to the Honourable Prime Minister PMOindia’ என்ற 3 பக்க கடிதத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முறையான திட்டமின்றி நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு சமயத்தில் நடந்த தவறு இப்போதும் நடக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பால்கனி மக்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் பால்கனி அரசு ஏழைகளை பற்றி நினைக்கவில்லை. அடுத்த வேளை உணவுக்கு எண்ணெய் இல்லாத ஏழைகள், எப்படி விளக்கேற்றுவார்கள்?

இவ்வாறு அக்கடிதத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
Tags:    

Similar News