செய்திகள்
குளோரின் பவுடர், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள்

கடலூர் நகராட்சியில் குளோரின் பவுடர், கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Published On 2020-04-02 14:09 GMT   |   Update On 2020-04-02 14:09 GMT
கடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகளில் தூய்மைப்படுத்தும் வகையில் கிருமிநாசினி தெளிப்பது, குளோரின் பவுடர் தூவுவது ஆகிய பணிகளில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலூர்:

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் தூய்மைப்படுத்தும் வகையில் குப்பைகளை அப்புறப்படுத்தி கிருமிநாசினி தெளிப்பது, குளோரின் பவுடர் தூவுவது ஆகிய பணிகளில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் 27-வது வார்டுக்குட்பட்ட மாரியம்மன் கோவில்தெரு, சன்னதிதெரு, எருமராஜ அக்ரஹாரம் திருவரசன் பிள்ளைதோட்டம், ஆனைக் காரன்தெரு, போடிச்செட்டித்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, குளோரின் பவுடரையும் தூவினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடுகள் தோறும் வாசலில் வேப்பிலையை கட்டி தொங்கவிட்டனர். அதேபோல் கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News