செய்திகள்
வேப்பூர் ஆட்டுச்சந்தையில் கூடிய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை படத்தில் காணலாம்.

தடையை மீறி கூடிய வேப்பூர் ஆட்டு சந்தை

Published On 2020-03-20 10:10 GMT   |   Update On 2020-03-20 10:10 GMT
கடலூர் அருகே விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் தடையை மீறி ஆட்டுச்சந்தை இன்று நடந்தது.
விருத்தாசலம்:

கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் நிலையில் அதிக கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் வணிக வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றன. ஆட்டுச்சந்தையையும் மூடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் தடையை மீறி ஆட்டுச்சந்தை இன்று நடந்தது. இதில் கடலூர், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வெளியூர்களைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்கிச் செல்வதற்காகவும் வந்து குவிந்தனர்.

வழக்கத்தைவிட ஆட்டு சந்தையில் அமோகமாக விற்பனை நடந்தது. இன்று நடந்த சந்தையில் எந்தவித மருத்துவ வசதிகளும் செய்து தரப்படவில்லை. கொரோனா நோய் விழிப்புணர்வு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் சந்தைகளில் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News