செய்திகள்
கொரோனா வைரஸ்

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டு

Published On 2020-03-14 15:45 IST   |   Update On 2020-03-14 15:45:00 IST
கொரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வார்டில் 14 படுக்கை கொண்டதாகும். பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், பல்டிபாரா மீட்டர், வென்டிலேட்டர் வசதி, முக கவசங்கள், டாக்டர்கள், நர்சுகள் பயன்படுத்தும் பிரத்யோக ஆடை கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனிக்க 24மணி நேரமும் தனியறையில் தங்கி கவனிக்க நர்சு பிரத்யேகஅறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை சீனாவில் இருந்த வந்த 9 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்த வந்த 23 பேர் தனிமைபடுத்தப்பட்டு அங்கேயே தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தனியறை அவர்களை வெளியே கொண்டு செல்ல தனி வழி உள்ளது.

டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தினமும் பிரத்தியோக உடை ஒரு முறை பயன்படுத்தப்படும். பிறகு (அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது கழட்டிப் போட்டுவிட்டு அழிக்க கூடிய வகையில்) தேவையான உடை உள்ளது. முக கவசம் தேவையான அளவு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News