செய்திகள்
மொடக்குறிச்சி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மொடக்குறிச்சி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம், மன்னாதம் பாளையம் ரோடு, தோப்பு காரர் வீடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவரது கணவர் ரவி. இவர்களுக்கு ஹரிஷ் (9) என்ற மகன் உள்ளான். ரவியும் சரண்யாவும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரவி சென்னையில் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சரண்யா எலி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். பின்னர் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரண்யாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.