செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையில் திருட்டு
ஜோலார்பேட்டை அருகே நள்ளிரவில் செல்போன் கடையில் புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை கோடியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32) இவர் கோடியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார் .
நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார் இன்று காலை செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரமேஷ் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த 12 செல்போன்கள் ரூ.20 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.