செய்திகள்
அரசு தொடக்கப்பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் பயிலும் மாணவர்கள்

அரசு தொடக்கப்பள்ளியில் குளிர்சாதன வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பு

Published On 2020-02-27 18:17 GMT   |   Update On 2020-02-27 18:17 GMT
அரசு தொடக்கப்பள்ளியில் குளிர்சாதன வசதி, புராஜெக்டர், கணினி, பிரிண்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பசுமை நல சங்கம் சார்பில் ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அந்த பள்ளிக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கு ரூ.12 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பு அறையை அமைத்து கொடுத்துள்ளனர். அந்த அறையில் குளிர்சாதன வசதி, புராஜெக்டர், கணினி, பிரிண்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து கொடுத்துள்ளனர். மேலும், பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதற்கு வாகனம் வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அந்த ஸ்மார்ட் வகுப்பு அறையினை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இதேபோல முன்னாள் மாணவர்கள் தங்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து கல்வியில் பெரும் பங்கு ஆற்ற வேண்டும் என்றார்.

இதில் செந்துறை கல்வி மாவட்ட அலுவலர் சுந்தர்ராஜூ, தாசில்தார் குமரய்யா, வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், பள்ளி தலைமையாசிரியை விஜயராணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிர்மலா, வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், பள்ளி மேலாண்மைகுழு தலைவர் சாந்தி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ரமே‌‌ஷ் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பசுமை நல சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News