செய்திகள்
3 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் வழங்கிய காட்சி.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரியலூரில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

Published On 2020-02-25 13:24 GMT   |   Update On 2020-02-25 13:24 GMT
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரியலூரில் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு விநாயகர் கோவில், முருகன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெற்றது. மேலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. 

தாமரைக்குளம், கயர்லாபாத், கீழப்பழுர், விளாங்குடி, வாலாஜாநகரம் ஆகிய ஊராட்சிகளிலும், அரியலூர் நகரின் முக்கிய இடங்களிலும், கோர்ட்டு முன்பு, அரசு சிமெண்ட் ஆலை, அரசு போக்குவரத்துகழக பணிமனையிலும் கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 3ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர், யூனியன் சேர்மன் செந்தமிழ்ச்செல்வி, மகாலட்சுமி, தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், மாணவரணி சங்கர், பால் சொசைட்டி சங்க துணைத்தலைவர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பாலு, வடிவழகன், குமரவேல், அசோகன், நகர செயலாளர் செந்தில், மருதமுத்து, வக்கீல் வெங்கடாஜலபதி, சண்முகம், ராம கோவிந்தராஜன், திருவாசகம், ஜெயக்குமார், சாந்தி, அண்ணா தொழிற் சங்க பொறுப்பாளர் கோவிந்த ராஜ், தங்கவேல், ராஜேந்திரன் உட்பட அனை த்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News