செய்திகள்
அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா

அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப விழா

Published On 2020-02-18 17:53 GMT   |   Update On 2020-02-18 17:53 GMT
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப ஒற்றுமை, சகிப்புத்தன்மை குறித்து குடும்ப விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார்.

இதில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி மீனாட்சி, முதன்மை ஆலோசகர் கங்கா ஆகியோர் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நோக்கம் மற்றும் பணிகள் பற்றியும், மகளிருக்கான உதவி தொலைபேசி எண் "181" பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்த புகார்தாரர்களும், பிரச்சினை ஏற்பட்டு சமரசமாகி இணைந்துள்ள கணவன்-மனைவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News