செய்திகள்
கண்ணாடி உடைப்பு (கோப்புப்படம்)

பஸ் கண்ணாடி உடைப்பு: சென்ட்ரலுக்கு ரெயிலில் வந்த 30 கல்லூரி மாணவர்கள் சிக்கினர்

Published On 2020-02-10 14:54 IST   |   Update On 2020-02-10 14:54:00 IST
சென்னையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக சென்ட்ரலுக்கு ரெயிலில் வந்த 30 கல்லூர் மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
சென்னை:

சென்னை சென்ட்ரல் அருகே கடந்த 4-ந்தேதி மாணவர்கள் மோதலில் அரசு பஸ் (தடம் எண்.21) கல்வீசி உடைக்கப்பட்டது.

இது தொடர்பாக பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் புதுக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக போலீசார் அங்குள்ள கேமராவை போட்டு பார்த்தனர். இதில் மேலும் பல மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த மாணவர்கள் சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலில் வந்து பின்னர் குறிப்பிட்ட பஸ்களில் ஏறி தங்கள் கல்லூரிகளுக்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மாணவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரெயிலில் வந்த 30 மாணவர்கள் இன்று காலையில் போலீசில் சிக்கினர். அவர்கள் அனைவரையும் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் போது பதிவான வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதன் முடிவில் கல்வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News