செய்திகள்
மயங்கி விழுந்த ஏஜெண்டை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த காட்சி.

விருத்தாசலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஏஜெண்டு மயங்கி விழுந்தார்

Published On 2020-01-02 10:00 GMT   |   Update On 2020-01-02 10:00 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏஜெண்டு மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி இன்று காலை முதலே அனைத்து வேட்பாளர்களும், ஏஜெண்டுகளும் வாக்குச்சாவடி முன்பு வந்தனர்.

பின்பு அவர்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும்பணி நடந்து கொண்டிருந்த போது, ஒரு வேட்பாளரின் ஏஜெண்டான பரமேஷ்வரன் (வயது 30) திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த பரமேஷ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News