செய்திகள்
அதிமுக

மங்களூர் ஒன்றியத்தில் 2 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

Published On 2020-01-02 08:55 GMT   |   Update On 2020-01-02 08:55 GMT
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணியத்தில் 2 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு 66 ஊராட்சி தலைவர் பதவிக்கு 230 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 1030 பேரும், ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 107 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேரும் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான ஓட்டுபெட்டிகள் திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் பின்பு ஓட்டு சீட்டுகளை தனித்தனியாக பிரித்து கட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

மங்களூர் ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விருத்தகம்மாள் (அ.தி.மு.க.), அமுதா (சுயே), கற்பகம் (காங்), சத்யா (சுயே), ரமா (தி.மு.க.) ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் விருத்தகம்மாள் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

2-வது வார்டில் அபிராமி (சுயே), செல்லம்மாள் (அ.தி.மு.க.), பாப்பாத்தி (தி.மு.க.) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் பாப்பாத்தி 630 ஓட்டுகள்பெற்று வெற்றிபெற்றார்.

3-வது வார்டில் பாலகற்பகம் (அ.தி.மு.க.), சாந்தி (தி.மு.க.), மல்லிகா (சுயே) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பாலகற்பகம் 306 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Tags:    

Similar News