தொழில் நஷ்டத்தால் சொகுசு ஓட்டலில் வாலிபர் தற்கொலை
போரூர்:
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள சொகுசு ஓட்டலில் வாலிபர் ஒருவர் தங்கி இருந்தார். நீண்ட நேரமாக அவர் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா ஆகியோர் ஓட்டல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அந்த வாலிபர் மின்விசிறியில் தூக்குபோட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
விசாரணையில் தற்கொலை செய்த வாலிபர் மதுரவாயல் ஸ்ரீ லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகணேஷ் (26) என்பது தெரிந்தது.
அவர் ‘டிரேடிங்’ தொழில் செய்துவந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் ஹரிகணேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடன் பிரச்சினையால் தவித்து வந்த ஹரிகணேஷ் ஏற்கனவே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரவாயலில் வசித்து வரும் ஹரிகணேஷ் விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியது ஏன் என்பது மர்மமாக உள்ளது.
இதுதொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.