செய்திகள்
காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் முஸ்லிம் வியாபாரிகளின் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு போராட்டம்

Published On 2019-12-21 14:33 GMT   |   Update On 2019-12-21 14:33 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து காரைக்குடியில் இன்று முஸ்லிம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட் டத்தில் ஈடுபடு வதை தடுக்க வருகிற 1-ந் தேதி வரை விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று முஸ்லிம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் உள்பட நகர் முழுவதும் முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடியுள்ளனர்.

மேலும் காரைக்குடி ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காரைக்குடி 5 விலக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கும் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News