செய்திகள்
பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் - முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன்

பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் பா.ஜ.க.வில் இணைந்தார்

Published On 2019-12-20 03:23 GMT   |   Update On 2019-12-20 03:23 GMT
பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
சென்னை:

நடிகர் அஜித்குமார் நடித்த ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ உள்பட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். பிரபல இசையமைப்பாளரான இவர் சென்னையில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது இசையமைப்பாளர் கங்கை அமரன் உடனிருந்தார்.



இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பா.ஜ.க. கலை பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமையில் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், திரைப்பட தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ் மணி, பெப்சி சிவா, இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், பரத்வாஜ், தீனா, இயக்குனர்கள் கஸ்தூரி ராஜா, சக்தி சிதம்பரம், பிரவீன் காந்த், நடிகைகள் குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரங்கள் குறித்தும், 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் சேகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News