செய்திகள்
வேலூர் அருகே கார் மோதியதில் லாரியில் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி
வேலூர் அருகே கார் மோதியதில் லாரியில் சிக்கி ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
ஒடுகத்தூர் கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த அரசன் (வயது 27). ஆட்டோ டிரைவர் நேற்று இரவு ஒடுகத்தூரில் இருந்து கொய்யா பழங்களை ஏற்றிக் கொண்டு வேலூர் வந்துகொண்டிருந்தார்.
அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது வேகமாக வந்த கார் ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் தறிகெட்டு ஒடிய ஆட்டோ சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் அரசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.