செய்திகள்
கலெக்டர் உமா மகேஸ்வரி

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-12-11 19:01 IST   |   Update On 2019-12-11 19:01:00 IST
கனரக சரக்கு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் பின்புறம் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கனரக சரக்கு வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களில் பின்புறம் ஆட்களை ஏற்றி செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறானதாகும். இவ்வாறு சரக்கு வாகனங்களில் ஆட்கள் பயணிப்பதால் எளிதில் விபத்துக்குள்ளாகவும், விபத்து ஏற்படும் போது அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பாகவும் அமையும். இதனால் இந்த தவறை செய்யும் ஓட்டுநர்களின் உரிமங்கள் 3 மாத காலத்திற்கு தற்காலிக தடை செய்யப்படுவதுடன்,  மீண்டும் அதே தவறை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தவறான முறையில் பயணித்து விபத்து நிகழும் சூழ்நிலையில் எந்த இழப்பீடும் கிடைக்கப்பெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News