செய்திகள்
கைது

வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய காதல் ஜோடி கைது

Published On 2019-11-25 14:50 IST   |   Update On 2019-11-25 14:50:00 IST
வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து நகை திருடிய காதல் ஜோடியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
போரூர்:

வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் பாண்டியன். இவரது மனைவி ரேவதி. இவர்களது வீட்டில் கடந்த 21-ந்தேதி 4 பவுன் தங்க நகை கொள்ளை போனது. இதுகுறித்து ஜெகதீஷ் பாண்டியன் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்து சென்றது பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ரேவதியின் உறவினரான கோயம்பேட்டைச் சேர்ந்த கார்த்திக் (24) என்றும் அவரது காதலி நித்யா (24) என்பதும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ரேவதி வீட்டிற்கு வந்து சென்றதும் அப்போது வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது சாவியை சுவர் ஓரமாக வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் அங்கு வந்து சாவியை எடுத்து திறந்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றதும் தெரியவந்தது.

இருவரிடமும் நடத்திய விசாரணையில் காதலர்களான அவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்ததும் தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் போதிய வருமானம் இல்லாததால் உறவினர் வீட்டிற்கு ஜோடியாக சென்று ஈடுபட்டுள்ளனர்.

அந்த பணத்தை கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது



Similar News