செய்திகள்
நகை கொள்ளை

மலேசியாவில் இருந்து சென்னை வந்த தந்தை-மகனிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளை

Published On 2019-11-25 08:59 GMT   |   Update On 2019-11-25 08:59 GMT
மலேசியாவில் இருந்து சென்னை வந்த தந்தை-மகனிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

மலேசியாவை சேர்ந்தவர் லெட்சுமணன். இவர் சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார்.

சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து தாம்பரத்தில் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்கு மலேசியாவில் இருந்து மகன் கபிலன் சென்னை வந்தார்.

இன்று காலையில் இருவரும் காரில் வந்து இறங்கி, நந்தனம் தேவர் சிலை அருகே நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி நகை-பணம், செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

இதுபற்றி சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

10 பவுன் செயின், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன், பாஸ்போர்ட் ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்துச் சென்று விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர். கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடக்கிறது.

கிண்டியில் 2 பெண்களிடம் அடுத்தடுத்து இதே பாணியில் கைவரிசை காட்டப்பட்டுள்ளது. மந்தைவெளியை சேர்ந்த ஜெயா, தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது 1½ பவுன் செயின் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கத்திமுனையில் பறித்து சென்றனர்.

நுங்கம்பாக்கத்தில் வேலை முடிந்து திரும்பிய பெண்ணிடமும் 10 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இந்த 3 சம்பவங்களிலும் ஒரே கொள்ளையர்கள்தான் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News