செய்திகள்
தண்ணீரில் மூழ்கி பலி

பெருந்துறை அருகே குட்டையில் குளித்த அதிகாரி மூழ்கி பலி

Published On 2019-11-12 15:12 GMT   |   Update On 2019-11-12 15:12 GMT
பெருந்துறை அருகே குட்டையில் குளித்த அதிகாரி தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள சிப்காட்டில் ஜீனியர் இன்ஜினியராக பணி புரிந்து வந்தவர் ஜெரோம் (வயது 53). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை. இவர் கடந்த 3 மாதத்துக்கு முன் பதவி உயர்வு பெற்று மானாமதுரையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் புராஜக்ட் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் வேலை காரணமாக பெருந்துறை சிப்காட் அலுவலகம் வந்தார். பிறகு அருகில் உள்ள செயற்கை குட்டையில் குளிக்க சென்றார்.

தனது உடைகள் மற்றும் செல்போனை கரையில் வைத்து விட்டு குளிக்க இறங்கிய அவர் வெகு நேரமாகியும் கரைக்கு வரவில்லை. இதனால் மற்ற பணியாளர்கள் குட்டையில் இறங்கி அவரை தேடினர். 30 நிமிட தேடுதல் பணிக்குப்பிறகு ஜெரோம் உடல் மீட்கப்பட்டது. குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அவரது உடலை பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News