செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த பெண் பலி - போலீசார் விசாரணை

Published On 2019-09-09 16:19 IST   |   Update On 2019-09-09 16:19:00 IST
ஈரோடு பஸ் நிலையத்தில் பெண் பலியான சம்பவத்தில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையம் திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அந்த பெண்ணை ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அந்த பெண் 5 அடி உயரத்தில் மாநிறத்தில் காணப்பட்டார். பச்சை கலர் ஜாக்கெட் கத்திரி பூ கலரில் பூ போட்ட சேலை அணிந்து உள்ளார். வலது கால் முட்டியில் காயத்தழும்பு காணப்படுகிறது.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News