செய்திகள்
விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் கலெக்டர் சி.கதிரவன் வழங்கியபோது எடுத்த படம்.

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க புதிய செயலி - கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்

Published On 2019-09-02 18:12 GMT   |   Update On 2019-09-02 18:12 GMT
வாக்காளர் விவரங்களை சரிபாக்கும் புதிய செயலியை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு:

ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை வாக்காளர்களே சரிபார்த்து திருத்தம் செய்து கொள்ள ‘ voter help line ’ என்ற செயலியில் ‘ ELECTOR VERIFICATION PROGRAMME ’ எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வாக்காளர்களும் ‘ voter help line ’ என்ற செயலியினை பதிவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள், அனைத்து வட்ட அலுவலகங்களில் உள்ள பொது சேவை மையங்கள், ஈரோடு மற்றும் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், மாவட்ட வாக்காளர் தகவல் தொடர்பு மையம், தேர்தல் பிரிவு, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விபரங்களை வருகிற 30-ந்தேதி வரை சரிபார்த்து கொள்ளலாம். .

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News