செய்திகள்
கோப்பு படம்

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு - ஈரோட்டில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்த வங்கி ஊழியர்கள்

Published On 2019-08-31 13:44 GMT   |   Update On 2019-08-31 13:44 GMT
ஈரோட்டில் பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வங்கி ஊழியர்கள் பணி புரிந்தனர்.
ஈரோடு:

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகிறது. அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

இதன் மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன. இந்த அறிவிப்புக்கு இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் இன்று வங்கி ஊழியர்கள் 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று மாலை எஸ்பி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் நரசிம்மன் கூறியதாவது :-

ஒரே நேரத்தில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும் இன்று மாலை ஸ்டேட் பேங்க் முன்பு வங்கி ஊழியர்கள் சம்பளம் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், நே‌ஷனல் கன்பெடரே‌ஷன் ஆப் பேங் எம்பிளாயிஸ், ஆல் இந்திய பேங்க் ஆபீஸ் அசோசியேசன், ஆல் இந்திய பேங்க் ஆபீஸர் கான்பெடரேசன் உட்பட 9 ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுபடுகின்றனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News