செய்திகள்
ஆட்டுக்குட்டியை போலீசில் ஒப்படைத்த சிறுமி

நாய்களிடம் சிக்கி தவித்த ஆட்டுக்குட்டியை மீட்டு போலீசில் ஒப்படைத்த சிறுமி

Published On 2019-08-29 15:17 IST   |   Update On 2019-08-29 15:17:00 IST
ஆதம்பாக்கத்தில் நாய்களிடம் சிக்கி தவித்த ஆட்டுக்குட்டியை மீட்ட சிறுமி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் ராம கிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் பிறந்து 5 நாட்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்று சுற்றியது. அதனை தெரு நாய்கள் விரட்டிய வண்ணம் இருந்தன. இதை அவ்வழியே சென்ற மீனம்பாக்கத்தை சேர்ந்த ரோஷ்டா ஜானு (வயது 8) என்ற 4-ம் வகுப்பு மாணவி கண்டு மனம் வருந்தினார், உடனே அவர் சத்தம் போட்டதோடு கற்களை வீசி எறிந்து தெரு நாய்களை விரட்டினார்.

பின்னர் அந்த ஆட்டுக் குட்டியை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது ஆட்டுக்குட்டி வழி தவறி வந்துவிட்டதாக கூறி போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் ஆட்டுக்குட்டியை ஒப்படைத்தனர்.

Similar News