செய்திகள்
திண்டுக்கல் பூட்டு - காரைக்குடி கண்டாங்கி சேலை

திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு

Published On 2019-08-29 03:37 GMT   |   Update On 2019-08-29 03:37 GMT
திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையை இவை பெறுகின்றன.
திண்டுக்கல்:

பொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருட்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்கம்.

புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. இந்த சட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில் காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு  ஆகியவற்றுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையை பெறுகின்றன.
Tags:    

Similar News