செய்திகள்
திருநாவுக்கரசர்

ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை - திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2019-08-22 05:52 GMT   |   Update On 2019-08-22 05:52 GMT
முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவரை கைது செய்தது கண்டத்துக்குரியது.

ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த கைது நடவடிக்கை உள்நோக்கத்தோடு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. அமித்ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரை எப்படி கைது செய்ய வேண்டும் என்று கடைபிடிக்காமல் அவரை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அவரை கைது செய்திருப்பது கேவலமான ஒன்றாகும். விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை கைது செய்ய வக்கற்ற இந்த அரசு ப.சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டிப் பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News