செய்திகள்
தாக்குதல் நடந்த பகுதி

காஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு

Published On 2019-08-20 13:01 IST   |   Update On 2019-08-20 13:01:00 IST
காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதையில் வந்த கும்பல் பொதுமக்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி ஆண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதை மற்றும் கஞ்சா போதையில் உள்ளவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

கோவிந்தவாடி அகரத்தில் நேற்று இரவு குடிபோதையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்தனர். 

இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புருசோத்தமன், இன்று காலை கோவிந்தவாடி அகரத்திற்கு தனது கூட்டாளிகளுடன் வந்து பொதுமக்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தனஞ்செழியன் என்பவர் உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதல் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் ரவுடியாக அறியப்படும் புருசோத்தமன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

Similar News