செய்திகள்
கோப்புப்படம்

தாம்பரத்தில் அரசு பஸ் கண்டக்டரிடம் பணப்பை பறிப்பு

Published On 2019-08-16 15:06 IST   |   Update On 2019-08-16 15:06:00 IST
தாம்பரத்தில் அரசு பஸ் கண்டக்டரிடம் பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

அத்திவரதர் தரிசனத்துக்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் திட்டக்குடியில் இருந்து கோயம்பேடு வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் வெங்கடாசலம் (39) என்பவர் கண்டக்டராக இருந்தார். புறப்படுவதற்கு முன்பு பஸ்சின் பின்புறம் ரோட்டில் நின்றபடி பயணிகளை அழைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்டக்டர் வெங்கடாசலம் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்தார். அதில் கொள்ளையர்கள் பறித்துச்சென்ற பணப்பையில் ரூ.10 ஆயிரம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Similar News