செய்திகள்
மாயம்

கவுந்தப்பாடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் திடீர் மாயம்- கணவர் போலீசில் புகார்

Published On 2019-07-20 16:41 IST   |   Update On 2019-07-20 16:41:00 IST
கவுந்தப்பாடி அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள காசிலிங்க கவுண்டன் புதூரை சேர்ந்தவர் அபிமன்னன். இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 27).

இவர்களுக்கு கோகிலா (9), மைதிலி (6) என 2 மகள்கள் உள்ளனர். கடந்த 16-ந் தேதி ஜோதி தனது கணவரிடம் குழந்தைகளுக்கு ஆதார் எடுத்து கொண்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார்.

அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது கணவர் பல இடங்களில் தேடியும் ஜோதியை காணவில்லை.

குழந்தைகளுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா? எனவும் தெரியவில்லை.

இது குறித்து அபிமன்னன் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்த குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் ஜோதியை தேடி வருகிறார்கள்.

Similar News