செய்திகள்
பள்ளியில் ஆசிரியர் தற்கொலை முயற்சி - அதிமுக பிரமுகர் மீது 5 பிரிவில் வழக்கு
தாம்பரம் அருகே பள்ளியில் ஆசிரியர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம்:
அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருபானந்தன்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவராக உள்ள அ.தி.மு.க. பிரமுகர் முரளிதரனுக்கு ரூ.5½ லட்சம் கடன் கொடுத்து இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருபானந்தன் பணத்தை திருப்பி கேட்ட போது அவரை முரளிதரன் தாக்கியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த கிருபானந்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. பிரமுகர் முரளிதரனுக்கு எதிராகவும், அவரை பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் முரளிதரன் மீது சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது கொலை மிரட்டல், சாதி பெயரை கூறி திட்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.