செய்திகள்
சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன்

மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2019-07-02 17:31 GMT   |   Update On 2019-07-02 17:31 GMT
சிவகங்கையில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு கலெக்டர் ஜெயகாந்தன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் உதவி வழங்கினார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிர மிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு உள்ளிட்ட 312 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பின்னர் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மின்சாரம் தாக்கி இறந்த அவரது வாரிசுதாராகிய மனைவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.1,91,500-க்கான காசோலையினையும் ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.4,91,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News