செய்திகள்
கோப்புப்படம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42.92 அடியாக குறைந்தது

Published On 2019-06-22 04:18 GMT   |   Update On 2019-06-22 04:18 GMT
வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று காலை 42.92 அடி தண்ணீர் உள்ளது. இதனால் சென்னைக்கு 10 நாட்கள் மட்டுமே குடிநீர் அனுப்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இது கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. இந்த ஏரிக்கு அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வந்தது. தற்போது கீழணை தண்ணீர் இன்றி வறண்டதால் கடந்த ஒரு மாதமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை.

லால்பேட்டையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 42.92 அடி தண்ணீர் உள்ளது. வெயில் அதிகம் இருப்பதால் தொடர்ந்து ஏரியின் நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் மட்டுமே ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.


இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 39 அடியாக இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்பிவைக்க முடியும். தற்போது 42.92 அடி நீர்மட்டம் இருப்பதாலும், ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும், தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதாலும் ஏரி நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

இதே நிலை நீடித்தால் சென்னைக்கு 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் அனுப்பமுடியும் என்று கூறினார்.
Tags:    

Similar News