செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி கோவை மெக்கானிக்கை கரம் பிடித்த கல்லூரி மாணவி

Published On 2019-06-10 12:21 GMT   |   Update On 2019-06-10 12:21 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி கோவை மெக்கானிக்கை கரம் பிடித்த கல்லூரி மாணவி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் - சவுமியா வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் சவுமியா பெற்றோர் தங்களது மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News