செய்திகள்

கடலூர் - லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

Published On 2019-06-08 08:11 IST   |   Update On 2019-06-08 08:11:00 IST
கடலூர் மாவட்டம் வேப்பேரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரெட்டை குறிச்சி என்ற பகுதியில் கார் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது அந்த கார் திடீரென மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் 2 பேர் காயமடைந்தனர். 

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

விசாரணையில், அவர்கள் அகமது ஷெரீப், நிஷா மற்றும் அசீமா பானு என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News