செய்திகள்
பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
பு.புளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்தவர் கவின் (வயது 20). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் உக்கரத்திலிருந்து புளியம்பட்டிக்கு இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே புளியம்பட்டி பகுதியிலிருந்து ஒரு வாலிபர் காவிலிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புளியம்பட்டி அருகே வடுகம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் வேகமாக மோதிக் கொண்டது.
இதில் 2 பேருக்கும் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.