செய்திகள்

பானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றது - ஒடிசா நோக்கி நகர்கிறது

Published On 2019-04-30 10:12 GMT   |   Update On 2019-04-30 11:24 GMT
பானி புயல் நாளை காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FaniStorm
சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ‘பானி’ புயல் அதிதீவிர புயலாக இன்று காலையில் வலுப்பெற்றது.

சென்னையில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவிலும் மசூதிப்பட்டினத்தில் இருந்து சுமார் 750 கி.மீ. தொலைவிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. பானி புயல் 1-ந்தேதி காலை அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. ஒடிசா நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதன் காரணமாக சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை அதிகாரி கூறியதாவது:

பானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.  #FaniStorm
Tags:    

Similar News