செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2019-04-24 17:58 GMT   |   Update On 2019-04-24 17:58 GMT
தேன்கனிக்கோட்டை அருகே 2 இளம்வயது திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட உட்பட்ட தட்டகரை பகுதியை சேர்ந்த, 24 வயது வாலிபருக்கும், 17 வயது 11 மாதம் மட்டும் பூர்த்தியான சிறுமிக்கும், திருமண ஏற்பாடுகள் நடந்தது. இது குறித்து, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாசில்தார் முத்துபாண்டி உத்தரவின் பேரில், பெட்டமுகிலாளம் கிராம நிர்வாக அலுவலர் ராமன் தலைமையிலான அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில், திருமண ஏற்பாடுகள் நடந்த சிறுமிக்கு, 17 வயது, 11 மாதம் மட்டுமே பூர்த்தியானது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோருக்கு அறிவுரை கூறினர். பின்னர் அதிகாரிகள், பெற்றோரை அழைத்து சிறுமிக்கு தற்போது திருமணம் செய்ய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

இதேபோல தேன்கனிக்கோட்டையை அடுத்த இருதுகோட்டை திருமாநகரில் 12 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் இன்று (புதன் கிழமை) நடைபெற இருந்தது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமிக்கு நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இருவீட்டு பெற்றோர் மற்றும் மணமகனை அதிகாரிகள் எச்சரித்தனர்.
Tags:    

Similar News